மாநில செய்திகள்

மெட்ரோ ரெயிலுக்கான குறைக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? இன்று முதல் அமலுக்கு வருகிறது + "||" + How much is the reduced fare for Metro Rail? Effective today

மெட்ரோ ரெயிலுக்கான குறைக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? இன்று முதல் அமலுக்கு வருகிறது

மெட்ரோ ரெயிலுக்கான குறைக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? இன்று முதல் அமலுக்கு வருகிறது
தமிழக அரசு மெட்ரோ ரெயிலுக்கான கட்டணத்தை குறைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டண விவரத்தை நேற்று வெளியிட்டது. இதில் டோக்கன் டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.70-ல் இருந்து ரூ.50 ஆக கட்டண குறைப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
மெட்ரோ ரெயில்
சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு முன்பாக 1 லட்சத்து 13 ஆயிரம் வரை அதிக பட்சமாக பயணிகள் தினசரி பயணித்து வந்தனர். நோய் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த உடன் அரசு பிறப்பித்த தளர்வுகளின் அடிப்படையில் மெட்ரோ ரெயில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரையிலான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

கட்டணம் குறைப்பு
பயணிகளிடம் அதிகபட்ச கட்டணமாக ரூ.70 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை குறைக்க அனைத்து தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை பரீசிலித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டார். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய கட்டண விவரத்தை நேற்று வெளியிட்டது.

அதன்படி டோக்கன் முறையில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக இருந்த ரூ.70 கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டணம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. பயண அட்டை மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு பத்து சதவீதமும், கியூஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் திருமழிசை வரை நீட்டிப்பு
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து திருமழிசை வரை நீட்டிக்க முடிவு செய்து அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
2. மெட்ரோ ரெயிலில் செப்டம்பர் 7 முதல் நேற்று வரை 3.60 லட்சம் பயணிகள் பயணம் - மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்
மெட்ரோ ரெயிலில் செப்டம்பர் 7 முதல் நேற்று வரை 3.60 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
3. பயணிகள் கோரிக்கையை ஏற்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
பயணிகளின் கோரிக்கையை ஏஎற்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
4. நாடு முழுவதும் மாநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
நாடு முழுவதும் மாநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
5. 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது
சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் துவங்கின