ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு


ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 2:51 AM GMT (Updated: 23 Feb 2021 2:51 AM GMT)

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை, 

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கியும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கட்சி தலைமை கழகம் அறிவித்தபடி பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஜெயலலிதாவின் பிறந்ததின விழா பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் மற்றும் பேச்சாளர்கள் விவரம் வருமாறு:-

1. வால்பாறை தொகுதியில் 24-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் சி.டி.சி. அப்துல் ஜப்பார், குன்னூர் எஸ்.சிவா ஆகியோர் பேசுகின்றனர்.

2. சூலூர் தொகுதியில் 28-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் கட்சி செய்தி தொடர்பாளர் ஏ.எஸ்.மகேஸ்வரி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் என்.சி.கே. முத்துகிருஷ்ணன், கூடலூர் ராமமூர்த்தி ஆகியோர் பேசுகிறார்கள்.

3. கிணத்துக்கடவு தொகுதியில் மார்ச் 1-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் கட்சி அமைப்பு செயலாளர் செ.தாமோதரன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் வி.எஸ்.பூமிபாலன், எம்.எப்.ரகிமான் ஆகியோர் பேசுகின்றனர்.

4. தொண்டாமுத்தூர் தொகுதியில் 2-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விவசாயபிரிவு துணைச்செயலாளர் எம்.பாரதியார், தோவாலா ரவி ஆகியோர் பேசுகின்றனர்.

5. பொள்ளாச்சி தொகுதியில் 2-ந் தேதியில் நடைபெறும் கூட்டத்தில் வர்த்தக அணி செயலாளர் பி.பீ.சஜீவன், க.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story