10.5% உள் இடஒதுக்கீடு இடைக்கால வெற்றி; கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு: ஜி.கே. மணி


10.5% உள் இடஒதுக்கீடு இடைக்கால வெற்றி; கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு:  ஜி.கே. மணி
x
தினத்தந்தி 26 Feb 2021 2:35 PM GMT (Updated: 26 Feb 2021 2:35 PM GMT)

10.5% உள் இடஒதுக்கீடு ராமதாசுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி என்றும் கூட்டணி குறித்து நாளை ராமதாஸ் அறிவிப்பார் என்றும் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.

சென்னை,

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இதுபற்றி பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி இன்று கூறும்பொழுது, வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு ராமதாசுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி.  இந்த அறிவிப்புக்காக முதல் அமைச்சர் பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.  தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து ராமதாஸ் நாளை அறிவிப்பார் என தெரிவித்து உள்ளார்.

Next Story