அ.தி.மு.க.வுடனான அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் த.மா.கா.வின் எண்ணத்தை பிரதிபலிப்போம் ஜி.கே.வாசன் நம்பிக்கை


அ.தி.மு.க.வுடனான அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் த.மா.கா.வின் எண்ணத்தை பிரதிபலிப்போம் ஜி.கே.வாசன் நம்பிக்கை
x
தினத்தந்தி 4 March 2021 3:29 AM GMT (Updated: 4 March 2021 3:29 AM GMT)

அ.தி.மு.க.வுடனான அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் த.மா.கா.வின் எண்ணத்தை பிரதிபலிப்போம் ஜி.கே.வாசன் நம்பிக்கை.

சென்னை, 

சென்னை தியாகராயநகரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் எதிர்க்கட்சியினரின் பொய் வாக்குறுதிகளை, அ.தி.மு.க.வின் நிஜ வாக்குறுதிகள் நிச்சயம் வெல்லும். அ.தி.மு.க.வுடனான அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் த.மா.கா.வின் எண்ணத்தை பிரதிபலிப்போம். இருகட்சிகளும் வெற்றிவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இலக்கை நிர்ணயிப்போம். த.மா.கா.வின் தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சாதகமான தொகுதிகள், தேர்தல் வியூகங்கள் குறித்து நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன். எங்களுக்கு கிடைக்கும் தொகுதிகளை, கிடைக்கும் வாய்ப்பை 100 சதவீதம் பயன்படுத்தி வெற்றிபெறக்கூடிய உறுதியான நிலையை ஏற்படுத்தி சட்டமன்றத்தில் த.மா.கா.வின் குரல் ஒலிக்கக்கூடிய நிலையை ஏற்படுத்துவோம்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க எத்தனை புதிய கட்சிகள் வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் மக்கள் மனதில் முதல் அணியாக, வெற்றி அணியாக அ.தி.மு.க.வே இருக்கிறது. சைக்கிள் சின்னம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் தொடர் சட்டமுயற்சி நடந்துகொண்டிருக்கிறது. அது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அந்த நம்பிக்கையில்தான் எங்களது செயல்பாடும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story