மார்ச் 04: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 March 2021 2:09 PM GMT (Updated: 4 March 2021 2:09 PM GMT)

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,53,449 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,36,963 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 490 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,508 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,36,280 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 4,160 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,76,81,361 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 50,706 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,73,64,809 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 50,543 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 3,978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5,15,644 பேர் ஆண்கள் (இன்று-276 பேர்), 3,37,770 பேர் பெண்கள் (இன்று-206 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை விவரம்:-






















Next Story