தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்வகுமார் நியமனம் + "||" + Selvakumar appointed Vice Chancellor, Tamil Nadu University of Veterinary Sciences
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்வகுமார் நியமனம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் கே.என்.செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 32 ஆண்டுகளாக மூத்த பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் ஆவார். தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்ட செல்வகுமார், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.