மாநில செய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்வு + "||" + Gold prices rise by Rs 88 per savaran in Chennai

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்வு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்வு
ஒரு கிராம் தங்கம் ரூ.11 உயர்ந்து ரூ.4,345-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில்துறையில் ஏற்பட்ட தேக்கத்தால், பாதுகாப்பான முதலீடுகளில் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தினர். இதன் காரணமாக தங்கத்தில் அதிக மூதலீடுகள் செய்யப்பட்டதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. 

தொழில்துறை தேக்கத்தால் பொருளாதார பாதிப்பு குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இதற்கிடையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. 

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.34,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் தங்கம் ரூ.11 உயர்ந்து ரூ.4,345-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில், துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.79 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 730 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
2. சென்னையில் இதுவரை வாகன சோதனையில் ரூ.7½ கோடி, 46 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னையில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் இதுவரை ரூ.7½ கோடி, 46 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
3. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,216-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4. தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரிப்பு
ஒரு கிராம் தங்கம் ரூ.4,235-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. சென்னை விமான நிலையத்தில் ரூ.65½ லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில், துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 420 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.