மாநில செய்திகள்

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சில்லரை வணிகத்துக்கு தடை விதிக்கக்கூடாது + "||" + Retail trade in Coimbatore vegetable market should not be banned

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சில்லரை வணிகத்துக்கு தடை விதிக்கக்கூடாது

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சில்லரை வணிகத்துக்கு தடை விதிக்கக்கூடாது
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சில்லரை வணிகத்துக்கு தடை விதிக்கக்கூடாது விக்கிரமராஜா வேண்டுகோள்.
சென்னை, 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 10-ந் தேதி முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கறி அங்காடி செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு சென்னை கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில், சில்லரை வணிகர்களின் வாழ்வு கேள்விக்குறியானது. ஏறத்தாழ 8 மாதங்களுக்கு பின்னர்தான் படிப்படியாக கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டு இப்போது தான் நிலைமை சீராகி வருகிறது.

அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவுகள், அனைத்து குடிமக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது மட்டுமன்றி, அதனால் நாட்டின் பொருளாதாரமும் சீரழிக்கப்படுகிறது. வணிகர்கள் மீது அதிரடி கட்டுப்பாடுகளை திணிப்பது என்பது நியாயமற்றது. இதனை அரசு அதிகாரிகள் சீர்தூக்கி பார்த்திட வேண்டும்.

எனவே சில்லரை வணிகத்தில் விதிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சுழற்சி முறையில் வணிகம் நடைபெற்று, வணிகர்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஆக்கி தொடர் பாகிஸ்தான் சம்மேளன நிர்வாகி வேண்டுகோள்
இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஆக்கி தொடர் பாகிஸ்தான் சம்மேளன நிர்வாகி வேண்டுகோள்.
2. “நான் நெருக்கடிகளை எதிர்கொள்கிறேன், நீங்கள் வெற்றியை பெற்று தாருங்கள்'' தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்
மிரட்டலுக்கு அஞ்சாத இயக்கம் தி.மு.க., நான் நெருக்கடிகளை எதிர்கொள்கிறேன், நீங்கள் வெற்றியை பெற்று தாருங்கள் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. தி.மு.க.வினர் பிரசாரத்தில் மரபையும், மாண்பையும் மனதில் வைத்து செயல்படவேண்டும்; ஸ்டாலின் வேண்டுகோள்
தி.மு.க.வினர் பிரசாரம் செய்யும்போது மரபையும், மாண்பையும் மனதில் வைத்து செயல்படுமாறு கேட்டு கொள்கிறேன் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. “அறிவியலின் கொடையான தடுப்பூசியை போட்டுக்கொள்வோம்” மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
“அறிவியலின் கொடையான தடுப்பூசியை போட்டுக்கொள்வோம்” மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
5. 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக உழைக்க வேண்டும் பா.ம.க.வினருக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
இடஒதுக்கீடு வழங்கியவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று பா.ம.க.வினருக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.