தமிழக சட்டசபை தேர்தலில் 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை


தமிழக சட்டசபை தேர்தலில் 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை
x
தினத்தந்தி 10 April 2021 2:44 AM GMT (Updated: 10 April 2021 2:44 AM GMT)

தமிழக சட்டசபை தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தமிழகத்தில் மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 4.57 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை.வாக்களித்த 4.57 கோடி பேரில் 2.31 கோடி ேபர் பெண் வாக்காளர்கள். 2.26 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 1,419 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

மாவட்டம் வாரியாக திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் மட்டுமே ஆண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

மே 2-ந் தேதி தமிழகத்தில் உள்ள 76 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைத்து எண்ணப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story