மாநில செய்திகள்

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது - மு.க.ஸ்டாலின் + "||" + Confidence in democracy is based on honest and fair elections - MK Stalin

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது - மு.க.ஸ்டாலின்

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குற்றச்சாட்டை விசாரித்த இந்திய தேர்தல் கமிஷன் அவர் 24 மணி நேரம் பிரசாரம் செய்ய அதிரடியாக தடை விதித்துள்ளது. மேற்கு வங்காள தேர்தலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கே பிரசாரம் செய்ய ஒருநாள் தடை விதித்திருக்கும் நடவடிக்கை மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கே பிரசாரம் செய்ய ஒருநாள் தடை விதித்தது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது. அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். ஒருசார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவர்கள் கூறிய முறைகேடு புகார்: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாணவர்கள் கூறிய முறைகேடு புகாரை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2. புதுச்சேரி முதல்-அமைச்சர் விரைவில் குணமடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து
புதுச்சேரி முதல்-அமைச்சர் விரைவில் குணமடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
3. சென்டிரலில் ரெயிலுக்காக தவித்த பயணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக பயணிகள் தவிப்பதை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்தார்.
4. ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள், பரிசு பொருட்கள் வழங்கிய மு.க.ஸ்டாலின்
ரம்ஜான் பண்டிகையையொட்டி தனது இல்லத்தில் வைத்து இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள், பரிசு பொருட்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
5. இது தி.மு.க. என்ற கட்சியின் அரசு அல்ல எல்லா பிரிவினரையும் அரவணைப்புடன் அழைத்து செல்லும் அரசு தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
‘இது தி.மு.க. என்ற கட்சியின் அரசு அல்ல; எந்தவித பேதமும் பாகுபாடும் இல்லாத - எல்லா பிரிவினரையும் அரவணைப்புடன் அழைத்து செல்லும் அரசு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.