மாநில செய்திகள்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆன்லைனில் மட்டுமே தேர்வு உயர்கல்வித் துறை அறிவிப்பு + "||" + Department of Higher Education Announcement Online Only in Universities and Colleges

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆன்லைனில் மட்டுமே தேர்வு உயர்கல்வித் துறை அறிவிப்பு

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆன்லைனில் மட்டுமே தேர்வு உயர்கல்வித் துறை அறிவிப்பு
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆன்லைனில் மட்டுமே தேர்வு உயர்கல்வித் துறை அறிவிப்பு.
சென்னை, 

கொரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பின்பற்றி வந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு, தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவல் அதிகரிக்க தொடங்கியதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லூரிக்கல்வி இயக்குனர், உயர்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் பின்வரும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

* பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும்.

* அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகள் ஆன்லைனில் மட்டும் நடத்தப்படும்.

* அனைத்து கல்வி பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்களில் வகுப்புகள் ஆன்லைனில் மட்டும் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மானூர் ஒன்றியக்குழு தலைவராக 22 வயது பெண் என்ஜினீயர் தேர்வு
மானூர் யூனியன் தலைவராக 22 வயது பெண் என்ஜினீயர் தேர்வு செய்யப்பட்டார். விக்கிரவாண்டி யில் கல்லூரி மாணவி தலைவர் ஆனார்.
2. ஐ.பி.எல். இறுதி போட்டி; டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். இறுதி போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
3. கேரள சினிமா விருதுக்கான தேர்வு குழு தலைவராக தமிழ் நடிகை நியமனம்...!
மலையாளத்தில் வெளியாகும் சிறந்த சினிமாக்களுக்கு வருடந்தோறும் கேரள அரசு விருதுகளை வழங்கி வருகிறது.
4. காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் குன்னவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் குன்னவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு.
5. ஐகோர்ட்டில் உதவியாளர் பணி: 3,500 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் குவிந்தனர்
சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 3,500 உதவியாளர் பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் தேர்வு எழுத குவிந்தனர். என்ஜினீயரிங், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களும் இந்த தேர்வில் பங்கேற்றனர்.