தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் இருந்தால் தி.மு.க. கோர்ட்டுக்கு செல்லலாமே? எல்.முருகன் அறிக்கை


தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் இருந்தால் தி.மு.க. கோர்ட்டுக்கு செல்லலாமே? எல்.முருகன் அறிக்கை
x
தினத்தந்தி 21 April 2021 8:54 PM GMT (Updated: 21 April 2021 8:54 PM GMT)

வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு: தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் இருந்தால் தி.மு.க. கோர்ட்டுக்கு செல்லலாமே? எல்.முருகன் அறிக்கை.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபை தேர்தல் எவ்வித முறைகேடும் இல்லாமல் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. அதற்காக தேர்தல் ஆணையத்திற்கு தமிழக பா.ஜ.க. நன்றி தெரிவிக்கிறது. வாக்குப்பெட்டிகளை தேர்தல் ஆணையம் கவனத்துடன் பாதுகாத்து வருகிறது. ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு குறைவு என்றும், வாக்குப்பெட்டிகளில் முறைகேடு நடந்து விடுமோ என்ற சந்தேகம் வருவதாகவும் மனுக்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.

வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகளே எந்த கருத்தும் கூறவில்லை. ஆனால் தி.மு.க. மட்டுமே பல்வேறு இடங்களில் மனு கொடுப்பது, தவறான செய்திகளை கொடுத்து வருகிறது. ஆணையத்தின் மீது சந்தேகம் இருப்பின் கோர்ட்டுக்கு தி.மு.க. செல்லலாமே? வாக்குப்பெட்டிகளை நம்புகிற கட்சி பா.ஜ.க., பணப்பெட்டிகளை நம்புகிற கட்சி தி.மு.க. மே 2-ல் தெரிந்து விடும் மக்கள் யார் பக்கமென்று. மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story