மாநில செய்திகள்

பாளையங்கோட்டை சிறையில் கைதி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை + "||" + CPCID inquires into death of prisoner at Palayankottai jail

பாளையங்கோட்டை சிறையில் கைதி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை

பாளையங்கோட்டை சிறையில் கைதி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை
பாளையங்கோட்டை சிறையில் கைதி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு.
சென்னை, 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதிகளிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் நடுத் தெருவை சேர்ந்த முத்து மனோ என்ற கைதி அடித்து கொலை செய்யப்பட்டார்.

காதல் தகராறில் பிளஸ்-2 மாணவரை அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் முத்து மனோவின் கூட்டாளிகள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த விவகாரத்தில் சிறை அதிகாரிகள், காவலர்கள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூரில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை
திருவாரூரில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை.
2. தவறுதலாக விடுவிக்கப்பட்ட 2 கைதிகள் சிக்கினர்
ஜெயங்கொண்டம் கிளை சிறையில் இருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட 2 கைதிகளை போலீசார் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் சிறை சூப்பிரண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
3. மயிலம் அருகே ரத்தக்காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
மயிலம் அருகே ரத்தக்காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை.
4. சூரப்பா மீதான விசாரணைக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் - உயர்கல்வித்துறை ஒப்புதல்
ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக்குழு எழுதிய கடிதத்திற்கு உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
5. பண்ணை வீட்டில் உள்ள கிணற்றில் சென்னை தொழில் அதிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
பண்ணை வீட்டில் உள்ள கிணற்றில் சென்னையை ேசர்ந்த ெதாழில் அதிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து அங்கு வேலை செய்யும் 5 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.