சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு


சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 April 2021 2:01 AM GMT (Updated: 30 April 2021 2:01 AM GMT)

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை, 

தமிழகத்தில் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சின்னசேலம் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பரமசிவம். இவர், எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.33 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, பரமசிவத்தை குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும் விதித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் பரமசிவம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், சொத்து குவிப்பு வழக்கில் பரமசிவத்துக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், அவருக்கு ஜாமீன் வழங்கியும் நேற்று உத்தரவிட்டார்.

Next Story