மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா - 113 பேர் பலி + "||" + Tamilnadu Coronavirus Update on April 30

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா - 113 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா - 113 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 66 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 16 ஆயிரத்து 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மேலும் 3,709- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 3,709-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கோவேக்சின் 77.8% செயல் திறன் கொண்டது எனத் தகவல்
கோவேக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3. ஜூன் 21: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 7 ஆயிரத்து 427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் இன்று 6 ஆயிரம் பேருக்கு கொரோனா - 94 பேர் பலி
மராட்டியத்தில் இன்று 6 ஆயிரத்து 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் மேலும் 7,427- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 189 பேர் உயிரிழந்துள்ளனர்.