மாநில செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இனி யாரும் குறை கூறக்கூடாது தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி + "||" + No one should criticize electronic voting machines anymore. Interview with CD Ravi

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இனி யாரும் குறை கூறக்கூடாது தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இனி யாரும் குறை கூறக்கூடாது தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இனி யாரும் குறை கூறக்கூடாது தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி.
சென்னை, 

பா.ஜ.க.வின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுடைய தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம். அமைய உள்ள புதிய அரசுக்கு எங்களுடைய வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, எங்களின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கும்.

இந்த தேர்தலில் பா.ஜ.க.வினர் கடுமையாக உழைத்தனர். அந்த உழைப்பு வாக்குகளாக மாறவில்லை. இருப்பினும், பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். முன்பைவிட பா.ஜ.க.வினர் இனி அதிகம் உழைக்க வேண்டும்.

கூட்டணி கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்கி இருக்கின்றன. எனவே இனிமேல் யாரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குறை கூறக்கூடாது.

பா.ஜ.க வேல் யாத்திரை மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான 1-ந்தேதி தபால் ஓட்டுகள் எண்ண வாய்ப்புள்ளதா? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான 1-ந்தேதி தபால் ஓட்டுகள் எண்ணப்படுமா? என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில் கூறியுள்ளார்.
2. சென்னையில், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போலீஸ் கமிஷனர் பேட்டி
சென்னையில், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போலீஸ் கமிஷனர் பேட்டி.
3. நான் காதலில் தோல்வி அடைந்தேன் நடிகை அஞ்சலி பேட்டி
அஞ்சலி நடித்த சைலன்ஸ் படம் ஓ.டி.டி.யில் வெளியானது. தற்போது தமிழில் பூச்சாண்டி படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
4. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
5. “குறுக்கு வழியில் வெற்றி பெற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை” சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பேட்டி
“குறுக்கு வழியில் வெற்றிபெற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை” என்று சைதை துரைசாமியின் குற்றச்சாட்டுக்கு, மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.