மாநில செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு + "||" + Case in the High Court seeking to declare a complete curfew in Tamil Nadu to prevent the spread of corona

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்க கோரிய வழக்கு தொடர்பான விசாரணை நாளை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
சென்னை, 

கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வருகிற 6-ந் தேதி காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், "தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல் எதிரொலி: பீகாரில் உள்விளையாட்டு மைதானம் கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றம்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பீகாரில் உள்விளையாட்டு மைதானம் ஒன்று கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
2. கொரோனா பரவல்: கோவில்பட்டியில் 11 கடைகள் மூடல்
கொரோனா பரவல் காரணமாக கோவில்பட்டியில் 11 கடைகள் மூடப்பட்டன.
3. மராட்டிய மாநிலத்தில் முழு ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு - மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
மராட்டிய மாநிலத்தில் முழு ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
4. கேரளாவில் ஓட்டு எண்ணிக்கையன்று முழு ஊரடங்கு தேவை இல்லை - கேரளா ஐகோர்ட்டு உத்தரவு
அரசும், தேர்தல் ஆணையமும் எடுத்துள்ள தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகள் திருப்தியாக உள்ளதால், ஓட்டுஎண்ணிக்கையன்று( ேம 2-ந் தேதி) கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என ஐகோா்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. கொரோனா பரவல் அதிகரிப்பு: அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - தலைமை செயலாளர் உத்தரவு
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.