மாநில செய்திகள்

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்-மு.க.ஸ்டாலின் + "||" + Two members of the DMK who removed the name plate of Amma Restaurant in Maduravayal area have been expelled from the party

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்-மு.க.ஸ்டாலின்

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்-மு.க.ஸ்டாலின்
அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் இருவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முகஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை,

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகைகளை   திமுகவை சேர்ந்த இருவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். 

இந்தநிலையில், மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்து மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், உணவகத்தின் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தவும், 2 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் நீண்ட வரிசையில் நின்று அம்மா உணவகங்களில் பார்சல் வாங்கி சென்ற பொதுமக்கள்
ஈரோட்டில் நேற்று ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு நின்று அம்மா உணவகங்களில் உணவு வாங்கி சென்றனர்.
2. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படலாம் எனக்கூறப்படுகிறது.
3. மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி: பிரதமருக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி
மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
4. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா...? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தடுப்பூசிக்கு மத்திய அரசை மட்டும் சார்ந்திருக்காமல் உலகளாவிய டெண்டர் கோரியுள்ளோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. தமிழக முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு
கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.