தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு


தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 4 May 2021 1:35 PM GMT (Updated: 4 May 2021 1:35 PM GMT)

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 என ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் தங்களுக்கு ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. மே 31 ஆம் தேதி வரை ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றிய 1,212 செவிலியர்கள் நாளை பணி நிறைவு பெறவிருந்த நிலையில், அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story