மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து


மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து
x
தினத்தந்தி 7 May 2021 6:55 PM GMT (Updated: 7 May 2021 6:55 PM GMT)

மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து.

சென்னை, 

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முடித்தே தீரவேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். சுவாசிப்பதற்கு உயிர் காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில் நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும் ஆற்றல் அனுபவம் நிறைந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story