சித்த மருத்துவ மையம் திறப்பு: கே.பாலகிருஷ்ணன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு


சித்த மருத்துவ மையம் திறப்பு: கே.பாலகிருஷ்ணன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
x
தினத்தந்தி 10 May 2021 12:00 AM GMT (Updated: 10 May 2021 12:00 AM GMT)

சித்த மருத்துவ மையம் திறப்பு: கே.பாலகிருஷ்ணன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு.

சென்னை, 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 12 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் துறையில் உள்ள வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த சிகிச்சை முறைகளையும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்கு மருத்துவம் அளிக்க 12 மாவட்டங்களில் சித்த மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதை பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சித்த மருத்துவம், நவீன மருத்துவம் ஆகியவற்றையும் இணைத்து பயன்படுத்தி கொரோனாவை விரட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story