மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்த நடிகர் சிவக்குமார் குடும்பம் + "||" + The family of actor Sivakumar donated Rs 1 crore relief fund for corona prevention work

கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்த நடிகர் சிவக்குமார் குடும்பம்

கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்த நடிகர் சிவக்குமார் குடும்பம்
கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதியுதவி அளித்தனர்.
சென்னை,

கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்-மந்திரி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தினர் சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் சிவகுமார், கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவுவதற்காக தங்களால் முடிந்த நிதியை அளித்ததாகவும், கொரோனா தொற்றிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தமிழில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு பணிக்காக உயர் அதிகாரிகள் விமான பயணத்துக்கு அனுமதி
கொரோனா தடுப்பு பணிக்காக உயர் அதிகாரிகளின் விமான பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா தடுப்பு பணி: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த கோவை உள்பட 3 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரடியாக ஆய்வு செய்கிறார்.
3. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
4. கொரோனா தடுப்பு பணிக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை - ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு
கொரோனா தடுப்பு பணிகளுக்கு செல்லாத ஆசியர்கள் 3 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
5. கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் - அரசாணை வெளீயிடு
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளீயிட்டுள்ளது.