மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் + "||" + Interim report filed in connection with the Thoothukudi shooting incident

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு, முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது.
சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, இதுவரை 27-ம் கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது. அடுத்தகட்ட விசாரணை (மே) 17-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும். விரைவாக விசாரித்து விசாரணை அறிக்கையை அரசிடம் விரைவில் ஒப்படைக்க இருக்கிறோம் என்று ஒரு நபர் ஆணையத்தின் வக்கீல் அருள் வடிவேல் சேகர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினிடம், துப்பாக்கிச்சூடு சம்பவம் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி  அருணா ஜெகதீசன் இன்று தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை தாக்கல் செய்யும் போது முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உடனிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினம்: திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
2. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஆணையத்தின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஆணையத்தின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.
3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம் - வழக்கறிஞர் தகவல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
4. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நடிகர் ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராக உள்ளார்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு நடிகர் ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராக உள்ளார்.
5. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நாளை நேரில் ஆஜராவாரா நடிகர் ரஜினிகாந்த்?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நாளை நேரில் ஆஜராவாரா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.