ரேஷன் அட்டை இல்லாத மூன்றாம் பாலினர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தால் ரூ.2 ஆயிரம் நிவாரணம்


ரேஷன் அட்டை இல்லாத மூன்றாம் பாலினர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தால் ரூ.2 ஆயிரம் நிவாரணம்
x
தினத்தந்தி 3 Jun 2021 7:21 PM GMT (Updated: 3 Jun 2021 7:21 PM GMT)

ரேஷன் அட்டை இல்லாத மூன்றாம் பாலினர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தால் ரூ.2 ஆயிரம் நிவாரணம் தமிழக அரசு உத்தரவு.

சென்னை,

தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கொரோனா நிவாரண நிதியைப் பெறாத மூன்றாம் பாலினருக்கு அதை வழங்குவது பற்றி அரசு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் 11 ஆயிரத்து 449 பேர் மூன்றாம் பாலினராக, அவர்களுக்கான நல வாரியத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ரேஷன் அட்டைகள் உள்ள 2,956 பேருக்கு முதல் தவணை கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8,493 பேருக்கும் நிவாரணம் வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும்.

அதுகுறித்து பரிசீலனை செய்யப்பட்டு, ரூ.1.67 கோடி ஒதுக்கப்பட்டு, ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் சிறப்பு நிகழ்வாக மூன்றாம் பாலினர் நல வாரியத்தில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story