மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சப்-கலெக்டர்கள் பலர் இடமாற்றம்: சென்னை மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர்கள் நியமனம் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு + "||" + Many sub-collectors transferred across Tamil Nadu: Appointment of new Deputy Commissioners to Chennai Corporation

தமிழகம் முழுவதும் சப்-கலெக்டர்கள் பலர் இடமாற்றம்: சென்னை மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர்கள் நியமனம் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு

தமிழகம் முழுவதும் சப்-கலெக்டர்கள் பலர் இடமாற்றம்: சென்னை மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர்கள் நியமனம் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு
தமிழகம் முழுவதும் சப்-கலெக்டர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு புதிய துணை ஆணையர்களை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கடலூர் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித்சிங் கடலூர் கூடுதல் கலெக்டராக (வருவாய்) மாற்றப்பட்டார்.


ஈரோடு வணிக வரிகள் இணை ஆணையர் (மாநில வரிகள்) எஸ்.சரவணன், ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், தஞ்சை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஆர்.வைத்தியநாதன், தர்மபுரி மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டார். தர்மபுரி சப்-கலெக்டர் எம்.பிரதாப் திருவண்ணாமலை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகாசி, மேட்டூர்

சிவகாசி சப்-கலெக்டர் சி.தினேஷ்குமார், திண்டுக்கல் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக இடமற்றம் செய்யப்பட்டார். மேட்டூர் சப்-கலெக்டர் வி.சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக (கூடுதல் கலெக்டர், மேம்பாடு) நியமிக்கப்பட்டார்.

திண்டிவனம் சப்-கலெக்டர் எஸ்.அனு, பொதுத்துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டார். குளித்தலை சப்-கலெக்டர் எஸ்.சேக் அப்துல் ரகுமான், சேலம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சேரன்மகாதேவி சப்-கலெக்டர் பிரதிக் தயாள், ஈரோடு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டார். விருதாச்சலம் சப்-கலெக்டர் கே.ஜே.பிரவீன் குமார், ராமநாதபுரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

ராமநாதபுரம், தூத்துக்குடி

ராமநாதபுரம் சப்-கலெக்டர் என்.ஓ.சுகபுத்ரா, தஞ்சை கூடுதல் கலெக்டராக (வருவாய்) மாற்றப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை சப்-கலெக்டர் கே.இளம்பகவத், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி சப்-கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலொன், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக (தெற்கு) மாற்றப்பட்டு உள்ளார். திருப்பூர் சப்-கலெக்டர் வந்தனா கார்க், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பெரம்பலூர் சப்-கலெக்டர் ஜே.இ.பத்மஜா, சேலம் சாகோசெர்வ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராாக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனர் கே.பி.கார்த்திகேயன், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய மாநகராட்சி ஆணையர்கள்

பொதுத்துறை துணைச் செயலாளர் டி.கிறிஸ்துராஜ், சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் செயல் அதிகாரி கிராந்தி குமார் பதி, திருப்பூர் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அதிகாரி பி.விஷ்ணு சந்திரன், நெல்லை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் (தெற்கு) ராஜகோபால் சுங்கரா, கோவை மாநகராட்சி ஆணையரானார்.

சென்னை மாநகராட்சி

நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் (மேம்பாடு) மற்றும் ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரி எம்.எஸ்.பிரசாந்த், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (பணிகள்) மாற்றப்பட்டார். சென்னை வணிக வரிகள் இணை ஆணையர் (அமலாக்கம்) நாரணவரே மனிஷ் சங்கர்ராவ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (சுகாதாரம்) மாற்றப்பட்டார்.

பெரியகுளம் சப்-கலெக்டர் டி.சினேகா, சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (கல்வி) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வனப்பகுதியின் ஒரு அங்குலம் நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அரசு முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. கொரோனா தடுப்பிற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களுக்கு விலை நிர்ணயம் தமிழக அரசு உத்தரவு
கொரோனா தடுப்பிற்கு அவசியமான மருத்துவ உபகரணங்களுக்கான அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4. தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமானது குறித்து வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமானது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்குக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படதையடுத்து கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.