ஆக்சிஜன் ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு 3,972 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் - ரயில்வே துறை தகவல்


ஆக்சிஜன் ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு 3,972 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் - ரயில்வே துறை தகவல்
x

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு இதுவரை 3,972 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனாவால் எழுந்துள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு ரெயில்வேயும் களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நாடு முழுவதும்  397 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம்  ஆயிரத்து 628 டேங்கர்களில் 28 ஆயிரம் டன் மருத்துவ ஆக்சிஜன்  பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.  அந்த வகையில் தமிழகத்திற்கு மட்டும் இதுவரை 3 ஆயிரத்து 972 டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது என  ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், மராட்டிய மாநிலம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை ஆக்சிஜன் எக்பிரஸ் மூலம் ஆக்சிஜன் பெற்றுள்ளதாக ரெயில்வே கூறியுள்ளது. அதிகபட்சமாக டெல்லிக்கு  5 ஆயிரத்து 722 டன் ஆக்ஜிசன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திராவுக்கு 3 ஆயிரத்து 130  டன்னும் ஹரியானாவுக்கு 2 ஆயிரத்து 354 டன்னும் ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளது.

Next Story