மாநில செய்திகள்

கட்சிக்காக கஷ்டப்பட்டு இருக்கிறோம் தொண்டரிடம், சசிகலா பரபரப்பு பேச்சு + "||" + We are working hard for the party to volunteer, Sasikala sensational talk

கட்சிக்காக கஷ்டப்பட்டு இருக்கிறோம் தொண்டரிடம், சசிகலா பரபரப்பு பேச்சு

கட்சிக்காக கஷ்டப்பட்டு இருக்கிறோம் தொண்டரிடம், சசிகலா பரபரப்பு பேச்சு
‘‘கட்சிக்காக அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம்’’, என்று தொண்டரிடம், சசிகலா பேசும் ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது.
சென்னை,

அரசியலில் இருந்து விலகி இருக்கப்போகிறேன் என்று அறிவித்த சசிகலா, தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசும் ஆடியே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற தொண்டரிடம், சசிகலா பேசும் ‘ஆடியோ' ஒன்று நேற்று வெளியானது. உரையாடல் விவரம் வருமாறு:-


சசிகலா:- உங்க கடிதமெல்லாம் பார்த்தேன். கொரோனா காலத்துல கடிதம் எப்படி சரியாக போகுமானு தெரியல... அதனால் தான் போன்ல பேசிக்கிட்டு இருக்கேன்.

தொண்டர்:- உங்களை போல அம்மாவுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்தவங்க யாருமே இருக்கமுடியாதும்மா?

சசிகலா:- தொண்டர்கள் எல்லாத்துக்கும் அது தெரியுது. கட்சிக்காரங்களுக்கு அது நல்லாவே புரியுது.

‘நிச்சயமா வரேன்’

தொண்டர்:- நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்கம்மா?

சசிகலா:- உடல்நிலை நல்லா இருக்கு. ஒன்னும் பிரச்சினை இல்ல. 4 வருடம் தமிழ்நாட்டுல இல்லைனாலும், தொண்டர்களோட கடிதங்களுக்கு தொடர்ந்து பதில் அளிச்சுட்டுத்தான் இருந்தேன்.

தொண்டர்:- இப்போ நீங்க மறுபடியும் கட்சிக்கு வரவேண்டியது மட்டும் தான் பாக்கி

சசிகலா:- வரேன். வரேன். நிச்சயமா வரேன்.

தொண்டர்களின் மனகுமுறல்

தொண்டர்:- உங்கள மாதிரி வாழ்க்கையை தியாகம் செய்தவங்க யாருமில்ல. இப்போ எதிரிங்க கை ஓங்கிடுச்சு.

சசிகலா:- கட்சியை நல்லபடியாக கொண்டுவரணும். அவ்வளவுதான். அ.தி.மு.க.வுக்காக அவ்வளவு கஷ்டப்பட்டுருக்கோம். அதை என் உயிரில் இருந்துகூட பிரிக்கவே முடியாது. அப்படி இருக்கும்போது தொண்டர்களின் மனகுமுறலை கேட்டுக்கிட்டு என்னால் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா?

தொண்டர்:- இனியாவது நல்லவங்களை நம்பி சேருங்க. கட்சிக்காக உழைச்சவங்களையே இன்னிக்கு நீ யாருனு கேட்டுக்கிட்டு இருக்காங்க.... நன்றி விசுவாசமானவங்கள மட்டும் இனி கூப்பிடுங்க..

சசிகலா:- சரி.... சரி... சரி...

இவ்வாறு அந்த உரையாடல் நிறைவடைகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க.-வை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது...! சசிகலாவின் 23- வது வீடியோ...!
அ.தி.மு.க.வை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்று தாம் வெளியிட்டுள்ள புதிய ஆடியோவில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
2. ‘சீக்கிரமே நல்லது நடக்கும்’ முன்னாள் அமைச்சருடன், சசிகலா பேசும் ஆடியோவால் பரபரப்பு
முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம், சசிகலா பேசிய ஆடியோ ெவளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3. சசிகலா செல்போனில் பேசும் இன்னொரு ஆடியோ
சசிகலா செல்போனில் பேசும் இன்னொரு ஆடியோ நேற்று வெளியானது.
4. சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது
‘சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’ என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
5. சசிகலாவை நோக்கிதான் இனி அ.தி.மு.க. செல்லும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
சசிகலாவை நோக்கி தான் இனி அ.தி.மு.க. செல்லும்-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி