மாநில செய்திகள்

சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் வீடு புகுந்து திருடிய போலீசார் கைது செய்து விசாரணை + "||" + Police have arrested and are investigating the burglary of a house where alcohol was hunted

சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் வீடு புகுந்து திருடிய போலீசார் கைது செய்து விசாரணை

சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் வீடு புகுந்து திருடிய போலீசார் கைது செய்து விசாரணை
சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
வேலூர்,

வேலூர் மாவட்டம் நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் நேற்று முன்தினம் சாராய வேட்டைக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் சாராய வியாபாரிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அங்கிருந்த சாராய அடுப்பு, சாராய ஊறல்களை அழித்த போலீசார் பின்னர் நச்சுமேடு மலைக்கிராமத்தில் உள்ள சாராய வியாபாரிகள் வீடுகளில் சாராய பாக்கெட்டுகள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனையிட்டனர்.


ரூ.8½ லட்சத்தை எடுத்த போலீசார்

பூட்டியிருந்த சில வீடுகளின் பூட்டு மற்றும் பீரோக்களை உடைத்து பார்த்தனர். அப்போது 2 வீடுகளில் இருந்து ரூ.8½ லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர்.

இதனை அறிந்த மலைக்கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டு, ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைப்பது தவறு, அத்துடன் பீரோக்களை உடைத்து எடுக்கப்பட்ட பணம், நகையை ஒப்படைக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அந்த வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பணம், நகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் நச்சுமேடு மலைக்கிராம மக்கள் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், சாராய வேட்டைக்காக மலைப்பகுதிக்கு வந்து வீடுகளின் பூட்டு, பீரோக்களை உடைத்து நகை, பணத்தை எடுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இதுதொடர்பாக வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல் படை வீரரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

கைது

அதன் அடிப்படையில் சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் பூட்டிய வீடுகளுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடி வந்ததாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது அரியூர் போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார் இளையராஜா, யுவராஜ் ஆகிய 3 பேரையும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது-கஞ்சா விற்ற 13 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 194 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2. திருவாரூர் அருகே ஏ.டி.எம். எந்திரம் கொள்ளை முயற்சியில் ஒருவர் கொலை; 4 பேர் கைது
திருவாரூர் அருகே ஏ.டி.எம். எந்திரம் கொள்ளை முயற்சியில் அதனை தடுக்க முயன்ற கட்டிட உரிமையாளர் கொல்லப்பட்டு உள்ளார்.
3. சிவசங்கர் பாபா மீதான சர்ச்சை எதிரொலி; மாற்றுச்சான்றிதழை வாங்கிச் செல்லும் மாணவிகள்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார்.
4. ஜார்க்கண்ட்: காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; மேலாளர், மனைவி உள்பட 4 பேர் கைது
ஜார்க்கண்ட் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மேலாளர், மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
5. யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது
மதனின் யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா தான் நிர்வாகி என விசாரணையில் தெரிய வந்துள்ளது.