மகாராஷ்டிராவின் புனேவில் இருந்து 3.65 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன


மகாராஷ்டிராவின் புனேவில் இருந்து 3.65 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன
x
தினத்தந்தி 11 Jun 2021 12:32 PM GMT (Updated: 11 Jun 2021 12:32 PM GMT)

மகாராஷ்டிர மாநிலம் புனேவிலிருந்து மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு இன்று வந்தடைந்தன.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன. இதனால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

எனவே தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பில் இல்லை என்பதால் உடனடியாக தடுப்பூசிகளை அனுப்புமாறு மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவசர செய்தி அனுப்பினார்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவிலிருந்து மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு இன்று வந்தடைந்தன. சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து அந்த தடுப்பூசிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர் இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட உள்ளன.


Next Story