ரேஷன் அரிசியை உறவினர் வீட்டுக்கு எடுத்துச்சென்ற மாற்றுத்திறனாளியை போலீசார் தாக்கியது ஏன்?


ரேஷன் அரிசியை உறவினர் வீட்டுக்கு எடுத்துச்சென்ற மாற்றுத்திறனாளியை போலீசார் தாக்கியது ஏன்?
x
தினத்தந்தி 23 Jun 2021 7:15 PM GMT (Updated: 23 Jun 2021 7:15 PM GMT)

ரேஷன் அரிசியை உறவினர் வீட்டுக்கு எடுத்துச்சென்ற மாற்றுத்திறனாளியை போலீசார் தாக்கியது ஏன்? விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு.

சென்னை,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (வயது 50). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 18-ந்தேதி தனது வீட்டில் உள்ள ரேஷன் அரிசியை புளியரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அரிசியை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவரை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த பிரான்சிஸ் அந்தோணி, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் தனது தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரான்சிஸ் அந்தோணியின் மகள் அபிதா செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

இதுதொடர்பாக 22-ந்தேதி ‘தினத்தந்தி'யில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.

பின்னர், பிரான்சிஸ் அந்தோணி போலீசாரால் தாக்கப்பட்டது குறித்து தென்காசி போலீஸ் சூப்பிரண்டு 2 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Next Story