முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்


முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 24 Jun 2021 2:02 PM GMT (Updated: 24 Jun 2021 2:02 PM GMT)

முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. 

நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

2-வது முறையாக நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் செய்யாறு-திண்டிவனம் பகுதிகளில் புதிதாக தொழில் தொடங்க எந்தெந்த நிறுவனங்கள் வந்துள்ளன என்பது குறித்தும் அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் கொள்கை முடிவு எடுப்பது குறித்து விவாதிகக்ப்பட உள்ளது.

அதேபோல், அடுத்த மாதம் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய திட்டங்களை அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த திட்டங்கள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தால் அதை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், சிறுதுறைமுகங்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான திருத்தச்சட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்த சட்டத்திற்கு தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டதிருத்தம் தொடர்பாக மத்திய மந்திரியுடன் இன்று காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

காவேரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டம், புதிய கிணறுகள் அமைப்பது குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது குறித்தும் இந்த் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Next Story