மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகும் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை + "||" + DMK prepares for local body elections MK Stalin consults with district secretaries today

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகும் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகும் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 3 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களுக்கு நடைபெற்றது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.


மாவட்டங்கள் பிரிப்பு, வார்டு மறுவரையறை பணி போன்ற காரணங்களால் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை வருகிற செப்டம்பர் 15-ந்தேதிக்குள் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி உள்ளது.

இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

துரைமுருகன் அறிவிப்பு

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 25-ந்தேதி (இன்று) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

9 மாவட்டங்கள் மட்டுமின்றி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலும் நடத்தப்படாமல் உள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுடன், மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலும் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரக உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. - அ.தி.மு.க.வில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது.
2. 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த கோரி அ.தி.மு.க. வழக்கு
9 மாவட்டங்களுக்கு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை இரு கட்டமாக நடத்துவதற்கு பதில், ஒரே கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி அ.தி.மு.க.சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
3. உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அ.தி.மு.க.- பா.ஜனதா பேச்சுவார்த்தை
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று சந்தித்து உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
4. தமிழகம், புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல்
தமிழகம், புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி நடக்கிறது.
5. காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.