சிறுபான்மையினர் நலன் காக்க கருணாநிதி வழியில் பாடுபடும் மு.க.ஸ்டாலின் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பாராட்டு


சிறுபான்மையினர் நலன் காக்க கருணாநிதி வழியில் பாடுபடும் மு.க.ஸ்டாலின் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பாராட்டு
x
தினத்தந்தி 20 July 2021 8:12 PM GMT (Updated: 20 July 2021 8:12 PM GMT)

சிறுபான்மையினர் நலன் காக்க கருணாநிதி வழியில் பாடுபடும் மு.க.ஸ்டாலின் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பாராட்டு.

சென்னை,

இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுக்க இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒப்பற்ற திருநாள் பக்ரீத் திருநாள். இந்த தியாகத்திருநாளில், அன்பை, அமைதியை, இறை நம்பிக்கையை, சமாதானத்தை அனைவருக்கும் போதிக்கும் வகையில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.

தமிழக அரசின் அயராத முயற்சியால் கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. கடந்த முறை கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது நான் தமிழக ஹஜ் கமிட்டி தலைவராக இருந்தேன். சென்னை விமானநிலையத்திற்கு நேரடியாக வந்து 5,164 ஹஜ் பயணிகளை மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.

வரும் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் நமக்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஹஜ் பயணிகளை தமிழகத்திலிருந்து அனுப்புவதற்கு மு.க. ஸ்டாலின் உரிய அனுமதியை பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறுபான்மையினர் நலன் காப்பத்தில் கருணாநிதியை போலவே மு.க.ஸ்டாலினும் பாடுபடுகிறார்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story