மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல் + "||" + Chance of rain in 10 districts in Tamil Nadu Meteorological Center Info

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 23 வரை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், 25 ஆம் தேதி வரை தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை - தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் 4 மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் வெ.இறைய்னபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், சென்னை தலைமைச்செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
4. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.