மாநில செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் தவணை போடப்படுகிறது + "||" + The second installment of the CoviShield vaccine is being given today at 138 centers in the Salem district

சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் தவணை போடப்படுகிறது

சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் தவணை போடப்படுகிறது
சேலத்தில் இன்று 138 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் தவணை போடப்படுகிறது.
சேலம், 

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காப்பதற்காக நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதன்படி சேலத்தில் ஆரம்ப கட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன. பின்னர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

அதன்படி சென்னையில் இருந்து சேலத்துக்கு வரும் தடுப்பூசிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள 138 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.. இருப்பு இருக்கும் போது பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. இல்லாத நாட்களில் தடுப்பூசி போடப்படாது என்று மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

சேலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 17 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இதைத்தொடர்ந்து நேற்று 138 மையங்களில் 2-ம் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டன. இந்த நிலையில் சேலத்திற்கு நேற்று 38 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, சேலத்திற்கு 38 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து உள்ளன. அதில் சேலம் சுகாதார மாவட்டத்திற்கு 9,500-ம், ஆத்தூர் சுகாதார மாவட்டத்திற்கு 3 ஆயிரம் தடுப்பூசிகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதே போன்று தர்மபுரிக்கு 7 ஆயிரத்து 500, கிருஷ்ணகிரிக்கு 11 ஆயிரத்து 500, நாமக்கல்லுக்கு 7 ஆயிரம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 2-ம் தவணை தடுப்பூசி மட்டும் 138 மையங்களில் போடப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என்று கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. சரிவில் இருந்து மீளுமா ஐதராபாத் அணி? டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் உள்ள ஐதராபாத் அணி, பலம் வாய்ந்த டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
3. மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல்
மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் .
4. “சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்று நட நடவடிக்கை" - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்று நட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
5. மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 413 பேருக்கு கொரோனா தொற்று - 49 பேர் பலி
மராட்டியத்தில் இன்று மேலும் 3,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.