முதல்-அமைச்சரின் கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி


முதல்-அமைச்சரின் கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
x
தினத்தந்தி 29 July 2021 8:11 AM GMT (Updated: 29 July 2021 8:11 AM GMT)

முதல்-அமைச்சரின் கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

தஞ்சாவூர் அருகே கள்ளப்பெரம்பூர் பகுதியில் உள்ள செங்கழுநீர் ஏரியில் தூர்வாரும் பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை பார்வையிட்டார்.  அதன்பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறப்பது குறித்து ஏற்கனவே துறை ரீதியாக ஆலோசனை செய்யப்பட்டது.

கொரோனா 3வது அலை வந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.  கொரோனா தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இருந்தாலும், அது எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும் என தெரியவில்லை.  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்போது எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவு பள்ளிகள் திறப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் என்ன சொல்கிறாரோ, அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.


Next Story