மாநில செய்திகள்

500-க்கு 499 மதிப்பெண் பெற்று சென்னை மாணவர் தானேஷ் மாநில அளவில் முதல் இடம் + "||" + Scored 499 out of 500 Chennai student Thanesh First place at the state level

500-க்கு 499 மதிப்பெண் பெற்று சென்னை மாணவர் தானேஷ் மாநில அளவில் முதல் இடம்

500-க்கு 499 மதிப்பெண் பெற்று சென்னை மாணவர் தானேஷ் மாநில அளவில் முதல் இடம்
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டது.
 சென்னை,

அதிகபட்சமாக 500-க்கு 499 மதிப்பெண்ணை பலர் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த மாணவர் வி.தானேஷ் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.

இதன் மூலம் அவர் மாநில அளவில் முதல் இடத்தை பெற்று இருக்கிறார். இவர் கணித பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்ணும், இதர பாடங்களான ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் தலா 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

இதேபோல், அதே பள்ளியை சேர்ந்த அபினந்த்கிருஷ்ணன் 500-க்கு 498 மதிப்பெண் பெற்று இருக்கிறார். இந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.