சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக புதிய கருவிகள் - 30 நிமிடத்தில் முடிவுகள் தெரியும்


சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக புதிய கருவிகள் - 30 நிமிடத்தில் முடிவுகள் தெரியும்
x
தினத்தந்தி 5 Aug 2021 10:18 PM GMT (Updated: 2021-08-06T03:48:20+05:30)

சென்னை விமான நிலையத்தில் 30 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்கும் வகையில் ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது குறித்து கடந்த வாரம் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், லண்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனையுடன், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை ரூ.900 கட்டணமாக வசூலித்து 4 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகளை 13 நிமிடங்களில் அறிவிக்கும் நவீன சோதனை முறை சில நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.

அதன்படி ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகளில் பரிசோதனை முடிவுகள் 30 நிமிடங்களில் வழங்கப்படும்.

இந்த புதிய கருவியின் பயன்பாடு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய் செல்லும் பயணிகளுக்கு இது பெரும் வசதியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story