கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்


கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்
x
தினத்தந்தி 13 Aug 2021 5:50 AM GMT (Updated: 13 Aug 2021 5:50 AM GMT)

உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சென்னை
 
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.  அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

செம்மொழி தமிழ் விருது ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டு தோறும் ஜூன் 3ம் தேதி (கருணாநிதி பிறந்த நாள்) வழங்கப்படும்.

 உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்; தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.

தொழில் நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும். சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4,807 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

நில விவகாரங்கள், கொள்முதல் பிரச்னைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும்.

1921ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும்.

அரசின் உள்தணிக்கை அமைப்பு முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

2.05 லட்சம் ஹெக்டேர் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

கருணாநிதி பிறந்தநாளில் செம்மொழி தமிழ் விருது. செம்மொழி தமிழ் விருது ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டு தோறும் ஜூன் 3ம் தேதி வழங்கப்படும். 

சிவகளை, கொடுமணல், கீழடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு; தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அகழாய்வு பணிகளுக்காக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

என கூறினார்.

Next Story