நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் - முதல்-அமைச்சர் ஸ்டாலின் உறுதி


நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் - முதல்-அமைச்சர் ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 18 Aug 2021 6:29 AM GMT (Updated: 18 Aug 2021 6:29 AM GMT)

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

சென்னை,

சட்டமன்றத்தில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்  மீதான மூன்றாம் நாள் விவாதம் தொடங்கியது. சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும். நீட் தேர்வு தாக்கம் குறித்து குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையை பரிசீலித்து சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்படும் . நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story