9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்: முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் கி.வீரமணி நம்பிக்கை


9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்: முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் கி.வீரமணி நம்பிக்கை
x
தினத்தந்தி 20 Aug 2021 12:05 AM GMT (Updated: 20 Aug 2021 12:05 AM GMT)

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்: முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் கி.வீரமணி நம்பிக்கை.

சென்னை,

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பள்ளிகளை எப்போது திறந்து, முன்புபோல வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதை மிகவும் ஆவலாகவும், ஆர்வத்துடனும் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர்.

செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரையான வகுப்புகளை நடத்த, பள்ளிகளை திறக்க, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடைய துறை அதிகாரிகளோடு கலந்துபேசியதுடன், ஏராளமான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளில் நேரில்வந்து கலந்து, மாணவர்கள் பாடம் படித்து பயனடையும் ஏற்பாடுகளை செய்ய அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

இனியும் காலம்தாழ்த்தாது, வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல், மூத்தவகுப்பு மாணவர்கள், வகுப்புகளுக்கு சென்று பாதுகாப்புடன் வீடுகளுக்கு திரும்பச்செய்வதன்மூலம், கல்வியில் சிறந்த தமிழ்நாட்டின் தனிமுத்திரை பதிப்புத்தொடரும்.

முதல்-அமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story