தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Aug 2021 11:12 AM GMT (Updated: 23 Aug 2021 11:12 AM GMT)

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, தான் ஆண்மையற்றவர் என்று சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமுலம் அளித்துள்ளார்.

சென்னை, 

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.  அவர் மீது 3 போக்சோ வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளும் கைதுசெய்யப்பட்டனர்.

இதில் இரண்டு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும், ஆன்மீகம் சார்ந்த தொடர்பு நடத்துவதற்காக மட்டுமே பள்ளிக்கு சென்று வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் இரத்த கொதிப்பு, நீரிழிவு, இதயம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஜாமின் வழங்காமல் இரண்டு மனுக்களையும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. முன்னதாக முதல் போக்சோ வழக்கிலும் பாபாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்நிலையில் தனக்கு ஆண்மை இல்லை என்று சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனையில் ஆண்மை இல்லை என்பது தெரிய வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதுதொடர்பான அவரது ஜாமின் மனுவில், தான் ஒரு ஆண்மையற்றவன் என்பதால் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. அதனால் தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு கோரியிருந்த நிலையில், மகன் மற்றும் மகள் உள்ளபோது ஆண்மையற்றவர் என்று எப்படி கூற முடியும் என்று ஜாமின் மனு மீதான வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.   

Next Story