அங்கன்வாடி மையங்களில் வரும் 1-ம் தேதி முதல் சூடான மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவு


அங்கன்வாடி மையங்களில் வரும் 1-ம் தேதி முதல் சூடான மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 25 Aug 2021 2:37 AM GMT (Updated: 25 Aug 2021 2:37 AM GMT)

அங்கன்வாடி மையங்களில் வரும் 1 ஆம் தேதி முதல் சூடான மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அங்கன்வாடி மையங்கள் வரும் 1 ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு;-

*அங்கன்வாடி மையம் வரும்,  2 முதல் 6-வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்  மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை.

*செப்டம்பர்  1 முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க வேண்டும். 

*2 முதல் 6 வயது வரையிலான குழந்தைக்ளுக்கு சத்துணவு மட்டும் காலை 11.30-12.30க்குள் தரவேண்டும்.

*காலாவதியான, தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது

*அங்கன்வாடி பணியாளர்கள், விரல் நகங்களில் நகப்பூச்சு, செயற்கை நகங்கள், ஏதும் பயன்படுத்தக் கூடாது.

*மூக்கு சொறிதல், தலை கோதுதல், கண்கள், காது, வாயினை தேய்த்தல், எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும். 

*அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்


Next Story