கோவில் யானைகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை


கோவில் யானைகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 27 Aug 2021 10:09 PM GMT (Updated: 27 Aug 2021 10:09 PM GMT)

கோவில் யானைகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை அமைச்சர் சேகர்பாபு உத்தரவு.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கோவில் மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது கூறியதாவது:-

கோவில்களில் விரைவில் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளை அதிகப்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தி பள்ளி வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.625 கோடி மதிப்பிலான நிலங்களை முறையாக பராமரித்து வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் யானைகளுக்கு மாதம் ஒரு முறை மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இனி 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்), இரா.கண்ணன், கூடுதல் ஆணையர் (விசாரணை) ந.திருமகள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story