மாநில செய்திகள்

மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு + "||" + Bridge collapses in Madurai - Police file case against 3 persons

மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து தொடர்பாக 3 பேர் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை,

மதுரை-நத்தம் பறக்கும் சாலைக்கு கட்டப்படும் மேம்பாலத்துக்கான பணிகளின் போது, இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஆகாஷ் சிங் (வயது27) என்பவர் உயிரிழ்ந்தார். மதுரை – செட்டிக்குளம் இடையே 7.3 கி.மீ. தொலைவுக்கு ரூ.694 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் இடிந்து விழுந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக, பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார், பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின் ஒப்பந்ததாரர் பாஸ்கரன் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக இயந்திரங்களை கையாள்வது, விபத்தில் உயிரிழப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது சிவலிங்கம் கண்டெடுப்பு
மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது சதுஸ்ர வடிவ சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
2. மதுரை-தேனி இடையே அதிவேக ரெயில் எஞ்சின் இயக்கி சோதனை
ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரையிலான 17 கி.மீ. தூரத்திற்கு அதிவேகத்தில் ரெயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
3. மதுரையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மூவாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
4. மதுரையில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு
மதுரையில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. மதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 8 வரை தரிசனத்திற்கு தடை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.