நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 1 Sep 2021 8:24 AM GMT (Updated: 1 Sep 2021 8:24 AM GMT)

தமிழகத்தில் சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை நீலகிரி ,திண்டுக்கல், தேனி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கோயமுத்தூர் ,திருப்பூர் ,ஈரோடு ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஷியசாக இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story