திருமண நிதியுதவி திட்ட பயன்களை வசதி படைத்தவர்களுக்கு வழங்கினால் கடும் நடவடிக்கை


திருமண நிதியுதவி திட்ட பயன்களை வசதி படைத்தவர்களுக்கு வழங்கினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Sep 2021 7:11 PM GMT (Updated: 2 Sep 2021 7:11 PM GMT)

திருமண நிதியுதவி திட்ட பயன்களை வசதி படைத்தவர்களுக்கு வழங்கினால் கடும் நடவடிக்கை கள அலுவலர்களுக்கு அரசு எச்சரிக்கை.

சென்னை,

தமிழகத்தின் அனைத்து மாவட்ட சமூக நல அலுவலர்களுக்கும் சமூக நல இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் அனைத்து திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் நிதியுதவி தொகை, 8 கிராம் தங்க நாணயம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்திற்காக 2018-ம் ஆண்டில் இருந்து இதுவரை 4.96 லட்சம் பேர் விண்ணப்பித்து, தகுதியற்ற விண்ணப்பங்கள் போக தற்போது 3.34 லட்சம் தகுதியுள்ள விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

இதில் பயனாளிகளை தேர்வு செய்ய மனுதாரர்களின் இருப்பிடத்திற்கு சென்று கள ஆய்வு செய்வதற்கு பல்வேறு வழிகாட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான தகவல்களை மறைத்து வசதி வாய்ப்புள்ள மனுதாரருக்கு பயன் வழங்கி அறிக்கை சமர்ப்பிக்கும் கள அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story