"தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!" - மு.க. ஸ்டாலின் டுவிட்


தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது! - மு.க. ஸ்டாலின் டுவிட்
x
தினத்தந்தி 9 Sep 2021 9:07 PM GMT (Updated: 2021-09-10T02:37:15+05:30)

பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்பி வைக்கிறோம் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ரவீந்திர நாராயண ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்துள்ளார்.

ஆர்.என். ரவி தற்போது நாகலாந்து கவர்னராக செயல்பட்டு வருகிறார். இவர் நாளை முதல் தமிழ்நாட்டின் கவர்னராக செயல்பட உள்ளார்.

இதற்கிடையில், தற்போது தமிழ்நாடு கவர்னராக செயல்பட்டு வரும் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை முதல் பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதல்-அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்! தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர். இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!” என தெரிவித்துள்ளார்.Next Story