நெல்லையில் 800 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி


நெல்லையில் 800 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி
x
தினத்தந்தி 12 Sep 2021 5:34 AM GMT (Updated: 12 Sep 2021 5:34 AM GMT)

நெல்லை மாவட்டத்தில் இன்று 800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நெல்லை,

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், மற்ற நாட்களில் தடுப்பூசி செலுத்த இயலாதவர்கள் இன்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கப்பட்டுள்ள இந்த மெகா தடுப்பூசி முகாம், மாலை 7 மணி வரை நடைபெற இருக்கிறது. 

அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று  800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் காலை முதல் தடுப்பூசி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

நெல்லையில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்களில் சுமார் 2 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Next Story