மாநில செய்திகள்

மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Another 61 people in Pondicherry have been diagnosed with corona infection.

மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு

மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுச்சேரி
புதுச்சேரியில்  காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 61 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 177 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 683 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 131 பேர் குணமடைந்தனர். புதுவையில் தொற்று பாதிப்பு 1.60 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.85 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் பொதுமக்கள் 569 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 63 ஆயிரத்து 831 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.